Showing posts with label திருப்பல்லாண்டு. Show all posts
Showing posts with label திருப்பல்லாண்டு. Show all posts

Sunday, April 16, 2017

திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்  சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சனியமும் பல்லாண்டே.